குஜராத் கலவரத்தை முன்னின்று நடத்திய பாபு பஜ்ரங்கி பிணையில் விடுதலை !

மார்ச் 08, 2019 443

புதுடெல்லி (08 மார்ச் 2019): குஜராத்தில் நரோடா பாட்டியா கலவரத்தை முன்நின்று நடத்திய பாபு பஜ்ரங்கியை உச்ச நீதிமன்றம் பிணையில் விடுதலை செய்துள்ளது.

கடந்த 2002-ம் ஆண்டு குஜராத் கோத்ரா ரெயில் எரிப்பை தொடர்ந்து முஸ்லிம்கள் மீது கொடூர தாக்குதல் மேற்கொள்ளப் பட்டது. இந்த கலவரத்தில் 2000 த்திற்கும் அதிகமான முஸ்லிம்கள் கொல்லப் பட்டனர். பல பெண்கள் வன்புணர்வு செய்யப் பட்டனர். இந்த கலவரத்தை முன்னின்று நடத்தியவர்கள் ஆர் எஸ் எஸ் பஜ்ரங் தள்’ தலைமையிலான இந்துத்துவ அமைப்புகள். அப்போது மோடி தலைமையிலான ஆட்சி குஜராத்தில் நடைபெற்று வந்தது.

அப்போது அகமதாபாத்தின் நரோடா பாட்டியா பகுதியில் ஆயிரக்கணக்கான இந்துத்துவ கிரிமினல்கள் ஒன்றுகூடி நரோடியா பாட்டியாவின் முஸ்லிம் குடியிருப்புகளுக்குள் புகுந்து அம்மக்களை பச்சைப் படுகொலை செய்தனர். பலர் உயிரோடு எரித்து கொல்லப்பட்டனர்.

இந்த கலவரத்தை முன்னின்று நடத்திய பஜ்ரங் தள் தலைவர், பாபு பஜ்ரங்கிக்கு 21 ஆண்டுகள் ஆயுள் சிறை வழங்கி தீர்ப்பளித்திருந்தது குஜராத் உயர்நீதிமன்றம். இந்நிலையில் பாபு பஜ்ரங்கிக்கு பிணை வழங்கும்படி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதனை விசாரித்த உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை (07-03-2019) பிணை வழங்கி விடுவித்துள்ளது.

குஜராத் கலவரத்தில் அப்பாவி முஸ்லிம்களை படுகொலை செய்த பலர் தற்போதைய மோடியின் ஆட்சியில் விடுவிக்கப் பட்டுள்ள நிலையில் பாபு பஜ்ரங்கிக்கு பிணை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...