சிறுமி வன்புணர்வு வழக்கில் மத போதகர் ஷஃபீக் அல் காசிமி மதுரையில் கைது!

மார்ச் 08, 2019 638

மதுரை (08 மார்ச் 2019): கேரள மாநிலத்தில் 15 வயது சிறுமி வன்புணர்வு செய்யப் பட்ட வழக்கில் தேடப் பட்டு வந்த மத போதகர் ஷஃபிக் அல் காசிமி மதுரையில் கைது செய்யப் பட்டுள்ளார்.

கேரளாவில் கடந்த பிப்ரவரி மாதம் ஷபீக் அல் காசிமி என்ற பெயர் கொண்ட இமாம், 15 வயது சிறுமியை காட்டுக்குள் கடத்தி சென்று வன்புணர்ந்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக சிறுமி அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் ஷபீக் அல் காசிமியை ஒரு மாதமாக தேடி வந்தனர். இந்நிலையில் மதுரையில் ஷபீக் அல் காசிமி இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவருக்கு உதவியாக இருந்த ஃபாசில் என்பவரையும் போலீசார் கைது செய்து நேற்று மாலை திருவனந்தபுரம் கொண்டு வந்தனர்.

இன்று ஷஃபீக் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...