ரஃபேல் வழக்கில் திடீர் திருப்பம் - மத்திய அரசு வழக்கறிஞர் திடீர் பல்டி!

மார்ச் 09, 2019 441

புதுடெல்லி (09 மார்ச் 2019): ரஃபேல் ஆவணங்கள் திருடப்படவில்லை என்று மத்திய அரசின் வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறார்.

ரஃபேல் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் உள்ளிட்டோர் முறையிட்டனர். இந்த வழக்கு விசாரணையின் போது வாதாடிய மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், மத்திய அரசு ரகசியமாக வைத்திருந்த ரஃபேல் விமான ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்களை மனுதாரர்கள் திருடியிருக்கிறார்கள் என்று பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார்.

இந்நிலையில் பிடிஐ செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்துள்ள மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், பாதுகாப்புத் துறை அலுவலகத்தில் இருந்து ரஃபேல் ஆவணங்கள் திருடப்பட்டது என தாம் கூறியதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுவதாகத் தெரிகிறது. ஆவணங்கள் திருடப்பட்டது என்பது தவறானது. மனுதாரர்கள் அந்த ஆவணங்களை நகலெடுத்துப் பயன்படுத்தியிருக்கலாம் என்று கூறியிருக்கிறார். இந்த விவகாரம் ரஃபேல் வழக்கில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...