வேலையில்லா திண்டாட்டத்தை விமர்சித்த முஸ்லிம் மாணவர் மீது பாஜகவினர் தாக்குதல்!

மார்ச் 09, 2019 679

முஸாஃபர்பூர் (09 மார்ச் 2019): உத்திர பிரதேசத்தில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துவிட்டதாக விமர்சித்த முஸ்லிம் இளைஞர் மீது பாஜகவினர் கொடூர தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

உத்திர பிரதேசம் முசாஃபர்பூர் நகரத்தில் மோடியின் ஆட்சி குறித்து விவாத நிகழ்ச்சி நடத்தியது ‘பாரத் சமாச்சார்’ என்ற தொலைக்காட்சி. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்களுடன் பொதுமக்களும் தங்களுடைய கருத்துக்களை கூறினர்.

நிகழ்ச்சியில் பார்வையாளராக கலந்து கொண்ட அத்னான் என்ற பள்ளி மாணவரிடம் நிகழ்ச்சி நடத்துனர், வேலையில்லா திண்டாட்டம் குறித்து கேள்வி எழுப்பினார். அப்போது அத்னான், மோடி ஆட்சியில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து விட்டதாக விமர்சித்தார்.

அப்போது அங்கிருந்த பாஜகவினர் அத்னான் மீது கொடூர தாக்குதலை நடத்தியுள்ளனர். நிலைகுலைந்த அத்னானை ராஷ்ட்ரிய லோக் தள் கட்சியினர் பாஜக கும்பலிடமிருந்து காப்பாற்றியுள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...