சர்ஃப் எக்ஸெல் லவ் ஜிஹாதை ஊக்குவிப்பதாகக் கூறி இந்துத்வாவினர் போர்க்கொடி!

மார்ச் 10, 2019 419

மும்பை (10 மார்ச் 2019): சர்ஃப் எக்ஸெல் சோப்பு நிறுவன விளம்பரம் மத உணர்வுகளை புண்படுத்திவிட்டதாகக் கூறி சர்ஃப் எக்ஸெல் தயாரிப்புகளை புறக்கணிக்க வேண்டும் என்று இந்துத்வா அமைப்பினர் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.

சர்ஃப் எக்ஸெல் விளம்பரத்தில் ஹோலி பண்டிகையில் உபயோகிக்கும் கலர் பொடிகளுடன் ஒரு சிறுமி விளையாடுவது போலவும் ஒரு முஸ்லிம் சிறுவன் வெள்ளை உடையுடன் தொழுகைக்குச் செல்ல அந்த சிறுவனை உடைகள் கலர் பொடி படாமல் பாதுகாப்பபக தொழுகைக்கு அழைத்துச் செல்கிறாள் அந்த சிறுமி. சிறுவனின் உடை கலர் இல்லாமல் வெள்ளையாகவே உள்ளது. ஆனால் சிறுமியின் உடை கலர் பொடியுடன் உள்ளது. இது இந்து மத உணர்வுகளை புண்படுத்தி விட்டதாகக் கூறி இந்துத்வாவினர் சர்ஃப் எக்ஸெல் தயாரிப்புகளை புறக்கணிக்க வேண்டி சமூக வலைதளங்களில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்த விளம்பரம் லவ் ஜிஹாதை ஊக்குவிப்பதாக உள்ளதாம் அதனால் இந்துத்வாவினர் எதிர்ப்பு தெரிவித்து. சமூக வலைதளங்களில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...