விசாரணைக்கு அழைத்துச் சென்ற இரண்டு முஸ்லிம் இளைஞர்கள் போலீசாரால் அடித்துக் கொலை!

மார்ச் 11, 2019 673

பாட்னா (11 மார்ச் 2019): பீகாரின் விசாரணைக்காக அழைத்துச் சென்ற இரண்டு முஸ்லிம் இளைஞர்கள் போலீஸ் கஸ்டடியில் அடித்துக் கொலை செய்யப் பட்டுள்ளனர்.

பீகார் மாநிலம் ராம்திஹா கிராமத்தை சேர்ந்த முஹம்மது தஸ்லீம் (35) முஹம்மது ஹுஃப்ரான் (30) ஆகிய இரண்டு முஸ்லிம் இளைஞர்களை சக்கியா காவல் நிலையத்தை சேர்ந்த போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.

இவர்கள் இருவரையும் போலீசார் கஸ்டடியில் வைத்து கொடூரமாக தாக்கியுள்ளனர். இதில் இருவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இவ்விவகாரம் பீகாரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக 8 போலீசார் மீது வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பீகாரில் பாஜக கூட்டணியுடன் நிதிஷ்குமார் ஆட்சி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...