ரம்ஜான் நோன்பில் தேர்தல் - முஸ்லிம்கள் வாக்குகளை பாதிக்க வாய்ப்பு!

மார்ச் 11, 2019 441

கொல்கத்தா (11 மார்ச் 2019): ரம்ஜான் மாதத்தில் நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப் பட்டிருப்பது முஸ்லிம்கள் வாக்குகளை பாதிக்க அதிகம் வாய்ப்பு உள்ளதாக கொல்கத்தா மேயரும், திரிணமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான ஃபிர்ஹாத் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், 7 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப் பட்டுள்ளது, உத்திர பிரதேசம் பிஹார், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் முஸ்லிம்களின் வாக்குகளை பாஜக விரும்பவில்லை என்பதை காட்டுகிறது.

முஸ்லிம்களின் புனித மாதமான ரம்ஜானில் முஸ்லிம்கள் நோன்பு வைத்துக் கொண்டு தேர்தலில் வாக்களிக்க செல்ல மாட்டார்கள் எனபதை உணர்ந்து இந்த அறிவிப்பு வைக்கப் பட்டுள்ளதா? என்று ஃபர்ஹாத் ஹக்கிம் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் தேர்தல் ஆணையத்தை குறை கூற விரும்பவில்லை. ஆனால் தேர்தல் அறிவிக்கப் பட்ட தேதிகளில் ரம்ஜான் இருப்பதை தேர்தல் ஆணையம் பரிசீலிக்காதது ஆச்சர்யமானது என்று அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...