ரம்ஜான் மாததில் வாக்குப் பதிவு முஸ்லிம்களுக்கு சாதகமானது - அசாதுத்தீன் உவைசி!

மார்ச் 11, 2019 391

ஐதராபாத் (11 மார்ச் 2019): ரம்ஜான் மாதத்தில் வாக்குப் பதிவு நடத்தப் படுவது முஸ்லிம்கள் அதிக சதவீதத்தில் வாக்களிப்பார்கள் என்று அசாதுத்தீன் உவைசி தெரிவித்துள்ளார்.

ரம்ஜான் மாதத்தில் வாக்குப் பதிவு நடத்தப் படுவதற்கு சில முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள உவைசி, இது அவசியமில்லாத சர்ச்சை என்று தெரிவித்துள்ளார்.

மேலும் முஸ்லிம்கள் ரம்ஜான் மாதத்தில் நோன்பு வைத்தாலும் வழக்கமான அலுவல்களை அது பாதிப்பதில்லை. அலுவலகப் பணிகள், இதரப் பணிகள் ரம்ஜான் நோன்பினால் பாதிப்படைவதில்லை. மேலும் பெரும்பாலான முஸ்லிம் மக்கள் ஓய்விலும் இருப்பர், எனவே ரம்ஜான் நோன்பில் வாக்குப் பதிவு நடைபெறுவது முஸ்லிம்களுக்கு சாதகமே ஒழிய பாதகம் இல்லை. இதனால் வாக்குச் சதவீதம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. என்று உவைசி தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...