பாஜகவின் நண்பன் பாஜகவுக்கு எதிராக குரல்!

மார்ச் 12, 2019 371

மும்பை (12 மார்ச் 2019): தேசபக்தி ஒரு கட்சியின் ஏகபோக உரிமையல்ல என்று பாஜக மீது சிவசேனா கடும் விமர்சனம் செய்துள்ளது.

இதுகுறித்து பாஜகவின் கூட்டணி கட்சியான சிவசேனாவின் அதிகாரப்பூர்வ ஏடான சாம்னாவில் வெளியான தலையங்கத்தில், அரசியல் எதிரிகளை ஆன்டி நேஷனல்ஸ் என அழைப்பது கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது என்று கூறியுள்ளது.

மேலும், புலவாமா தாக்குதலுக்கு பின் நடத்தப்பட்ட பதிலடி தாக்குதல் ராணுவத்தின் கடமை. ஆனால் அரசியல்வாதிகள் அதற்கு உரிமை கோரி வருகிறார்கள். ராணுவத்தின் வெற்றியை தங்களின் வெற்றியாக நினைத்து சிலர் பதாகை வைத்தும், சுவரொட்டிகள் ஒட்டியும் விளம்பரம் தேடுகிறார்கள். இது ராணுவத்துக்கு கிடைத்த வெற்றி என அவர்கள் நினைக்கவில்லை. பாஜக எம்.பி.க்கள் பலர் ராணுவ உடை அணிந்து பிரசாரம் செய்கிறார்கள். இதனால் தான் அரசியல் லாபத்துக்காக இந்த தாக்குதலை மத்திய அரசு நடத்தியதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன எனவும் அந்த ஏட்டில் குறிப்பிட்டுள்ளது.

பாஜக எம்.பி.க்கள் பலர் ராணுவ உடை அணிந்து பிரசாரம் செய்கிறார்கள். இதனால் தான் அரசியல் லாபத்துக்காக இந்த தாக்குதலை மத்திய அரசு நடத்தியதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகிறமை குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...