காங்கிரஸில் இணைந்தார் ஹர்திக் பட்டேல்!

மார்ச் 12, 2019 301

அஹமதாபாத் (12 மார்ச் 2019): குஜராத்தில் ஹர்திக் பட்டேல் ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸில் இணைந்தார்.

குஜராத் மாநிலத்தில் பட்டேல் இனத்தவர்களுக்கு கல்வி,வேலைவாய்ப்பில் ஒதுக்கீடு கேட்டு போராட்டம் நடத்தி வந்தவர் ஹர்திக் பட்டேல். மேலும் பட்டேல் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி பட்டிடார் அனாமத் அன்டோலன் சமிதி என்ற இயக்கத்தின் தலைவர் ஹர்திக் பட்டேல் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடர்ச்சியாக 19 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார்.

இதற்கு முன்னரும் பலமுறை இதே கோரிக்கைக்காக பலமுறை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். சமீபத்தில் இவருக்கு திருமணம் நடந்தது.

இந்நிலையில், குஜராத் மாநில தலைநகர் அகமதாபாத் நகரில் நடைபெறும் காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டத்துக்கு இன்று வந்த ஹர்திக் பட்டேல், இன்று காங்கிரசில் இணைந்தார். அவரை ராகுல் காந்தி சால்வை அணிவித்து வரவேற்றார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...