உத்திர பிரதேசத்தில் முஸ்லிம் குடிசைகள் மீது தீ வைப்பு!

மார்ச் 13, 2019 533

மீரட் (13 மார்ச் 2019): உத்திர பிரதேசம் மீரட்டில் 200 க்கும் அதிகமான முஸ்லிம் குடிசைகள் தீ வைத்துக் கொளுத்தப் பட்டதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவி வருகிறது.

இதுகுறித்து சமூக வலைதளங்களில் கூறும் முஸ்லிம் ஒருவர், போலிசாரே தீ வைத்ததாக குற்றம் சாட்டுகிறார். ஆனால் மர்ம நபர்கள் சிலர் தீ வைத்ததாகவும் கூறப்படுகிறது. உண்மை தகவல் இதுவரை வெளியாகவில்லை.

இதற்கிடையே பல நாட்களாக இருந்த ஆக்கிரமிப்பாளர்கள் வீடுகளை குறிவைத்து தீ வைக்கப் பட்டதாகவும் கூறப்படுகிறது. எனினும் உறுதியான முழு தகவல் எதுவும் அங்கிருந்து வெளியாகவில்லை.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...