முஸ்லிம் நிறுவனத்திற்கு எதிராக பொய் செய்தி பரப்பிய சேனலுக்கு ரூ 50 லட்சம் அபராதம்!

மார்ச் 14, 2019 785

கோழிக்கோடு (14 மார்ச் 2019): முஸ்லிம் நிறுவனத்திற்கு எதிராக பொய் தகவல் பரப்பிய இந்துத்வா டிவி சேனலுக்கு ரூ 50 லட்சம் அபராதம் விதித்து கோழிக்கோடு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு சென்னை மலபார் கோல்டு ஜுவல்லரி நிறுவனத்தில் பாகிஸ்தான் சுதந்திர தினம் கொண்டாடப் பட்டதாக மார்ஃபிங் செய்யப் பட்ட போலியான வீடியோ ஒன்றை இந்துத்வா டிவியான சுதர்சன் டிவி செய்தி பப்பியது.

இந்த வீடியோ பொய்யானது என்றும் அப்படி எந்த நிகழ்ச்சியும் கொண்டாடப் படவில்லை என்றும் டிவி சேனலுக்கு எதிராக மலபார் கோல்டு நிறுவன தலைவர் ஏ.பி அஹமது, கோழிக்கோடு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இவ்வழக்கை பல கட்டங்களாக விசாரித்த நீதிமன்றம் தற்போது வெளியிட்டுள்ள தீர்ப்பில் சுதர்சன் டிவி பொய்யான தகவல் வெளியாக்கியது உண்மை என்றும்,  மலபார் கோல்டு நிறுவனத்திற்கு சுதர்சன் டிவி ரூ 50 லட்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளது.

இந்த தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள ஏ.பி அஹமது, இந்த தீர்ப்பு உண்மைக்கும் நேர்மைக்கும் கிடைத்த வெற்றி என்று தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...