காங்கிரஸ் முக்கிய தலைவர் பாஜகவில் இணைந்தார்!

மார்ச் 14, 2019 383

புதுடெல்லி (14 மார்ச் 2019): காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான டாம் வடக்கன் பாஜகவில் இணைந்துள்ளார்.

கேரளாவை சேர்ந்த டாம் வடக்கன் சோனியா காந்தியின் உதவியாளராகவும் இருந்துள்ளார். இந்நிலையில் தேர்தல் நேரத்தில் பாஜகவில் இணைந்துள்ளார். அமித்ஷா முன்னிலையில் அவர் பாஜகவில் இணைந்துள்ளார்.

சமீபத்திய புல்வாமா தாக்குதலை அடுத்து மத்திய அரசு மேற்கொண்ட தாக்குதலை காங்கிரஸ் கொச்சை படுத்துவதாக குற்றம் சாட்டியுள்ள டாம் வடக்கன் இதன் காரணமாகவே பாஜகவில் இணைந்ததாக தெரிவித்துள்ளார். காங்கிரஸில் நேரடி அரசியலில் ஈடுபடாமல் இருந்த டாம் வடக்கனுக்கு இம்முறை பாஜக தேர்தலில் போட்டியிட சீட் வழங்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...