நியூசிலாந்து மசூதி பயங்கரவாத தாக்குதலில் காயம் அடைந்த இந்தியர் கவலைக்கிடம்!

மார்ச் 16, 2019 325

கிறிஸ்ட்சர்ச் (15 மார்ச் 2019): நியூசிலாந்தில் மசூதிகள் மீது நடத்தப் பட்ட பயங்கரவாத தக்குதலில் காயம் அடைந்த இந்தியரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள மசூதியில் இன்று ஏராளமான மக்கள் வெள்ளிக்கிழமை தொழுகையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு திடீரென துப்பாக்கியுடன் நுழைந்த பயங்கரவாதி ஒருவன், தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்களை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டான். துப்பாக்கி சத்தம் கேட்டு அனைவரும் நாலாபுறமும் சிதறி ஓடினர். சிலர் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். சிலர் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் ரத்தக் காயங்களுடன் வெளியே ஓடி வந்தனர்.

தாக்குதல் பற்றி காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆயுதப்படை போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அதற்குள் அந்த நபர் தப்பிச் சென்றுவிட்டான். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதேபோல் அருகில் உள்ள மற்றொரு மசூதியிலும் ஒரு நபர் துப்பாக்கி சூடு நடத்தினான். இரண்டு இடங்களிலும் நடந்த தாக்குதல்களில் 49 பேர் உயிரிழந்ததாகவும், பலர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் பிரதமர் ஜெசிந்தா ஆண்டர்ன் தெரிவித்துள்ளார். உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.

இந்நிலையில் இந்த தாக்குதலில் இந்தியாவின் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த அஹமது இக்பால் ஜஹாங்கீர் என்பவரும் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளார். இவரின் நிலமை கவலைக்கிடமாக இருப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

அஹமது இக்பால் ஜஹாங்கீர் கிறிஸ்ட்சர்ச் தாக்குதல் நடத்தப் பட்ட அல்நூர் மசூதிக்கு அருகில் உணவகம் ஒன்று நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...