நியூசிலாந்து பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கவில்லையா பிரதமரே?

மார்ச் 16, 2019 247

கிறிஸ்ட்சர்ச் (15 மார்ச் 2019): உலகில் எங்கு பயங்கரவாத தக்குதல் நடந்தாலும் உடனே ஒரு ட்வீட் மூலம் கண்டனம் தெரிவிக்கும் இந்திய பிரதமர் மோடிக்கு நியூசிலாந்து பயங்கரவாத தாக்குதல் குறித்து தகவல் எட்டவில்லையா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள மசூதியில் இன்று ஏராளமான மக்கள் வெள்ளிக்கிழமை தொழுகையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு திடீரென துப்பாக்கியுடன் நுழைந்த பயங்கரவாதி ஒருவன், தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்களை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டான். துப்பாக்கி சத்தம் கேட்டு அனைவரும் நாலாபுறமும் சிதறி ஓடினர். சிலர் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். சிலர் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் ரத்தக் காயங்களுடன் வெளியே ஓடி வந்தனர்.

தாக்குதல் பற்றி காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆயுதப்படை போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அதற்குள் அந்த நபர் தப்பிச் சென்றுவிட்டான். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதேபோல் அருகில் உள்ள மற்றொரு மசூதியிலும் ஒரு நபர் துப்பாக்கி சூடு நடத்தினான். இரண்டு இடங்களிலும் நடந்த தாக்குதல்களில் 49 பேர் உயிரிழந்ததாகவும், பலர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் பிரதமர் ஜெசிந்தா ஆண்டர்ன் தெரிவித்துள்ளார். உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.

இந்நிலையில் உலகில் எந்த பகுதியில் பயங்கரவாத தாக்குதல் நடந்தாலும் உடனே டிவிட் மூலம் கண்டனம் தெரிவிக்கும் இந்திய பிரதமர் மோடி, இந்த தாக்குதலுக்கு இதுவரை கண்டனம் தெரிவிக்கவில்லை. ஒருவேளை உயிரிழந்தவர்கள் அனைவரும் முஸ்லிம்கள் என்பதாலா? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்த தாக்குதலில் இந்தியாவின் ஐந்தராபாத்தை சேர்ந்த ஒருவரும் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு கவலைக்கிடமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...