புதியவர்கள் கட்சியில் இணைந்ததாக பாஜக நடத்திய நாடகம் அம்பலம்!

மார்ச் 16, 2019 573

திருவனந்தபுரம் (16 மார்ச் 2019): கேரளாவில் கட்சியில் புதிதாக இணைந்ததாக பாஜகவினர் நடத்திய நாடகம் அம்பலமானது.

காங்கிரஸ் எம்.பி சசிதரூர் உறவினர்கள் உட்பட 14 பேர் பாஜகவில் புதிதாக இணைவதாக பாஜக ஆதரவு ஊடகங்களுக்கு மட்டும் தகவல் அனுப்பப் பட்டது. ஆனால் இந்த தகவல் அனைத்து செய்தி சேனல் செய்தியாளர்களுக்கும் தீயாக பரவியது . உடனே செய்தியாளர்கள் அனைவரும் பாஜக அலுவலகத்திற்கு சென்றனர். ஆனால் அங்கு அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

அங்கிருந்த அனைவரும் ஏற்கனவே பாஜகவில் உள்ளவர்கள்தான் என்றும் புதிதாக இணைவதுபோல் நாடகமாடியதும் செய்தியாளர்களுக்கு தெரிய வந்தது. எனினும் அவர்களிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்று செய்தியாளர்கள் கேட்டபோது, நாங்கள் புதிதாக எதுவும் இணையவில்லை. கட்சி அலுவலகத்திற்கு அழைத்தார்கள் வந்தோம் அவ்வளவுதான் என்றனர். இதுகுறித்து பாஜக நிர்வாகிகளிடம் செய்தியாளர்கள் கேட்டபோது அவர்கள் பதிலளிக்க மறுத்துவிட்டதோடு, அங்கிருந்து நழுவி சென்றுவிட்டனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...