மோடி பாபாவும் நாற்பது திருடர்களும் - சவ்கிதாருக்கு ( Chowkidar) காங்கிரஸ் பதிலடி!

மார்ச் 19, 2019 533

புதுடெல்லி (19 மார்ச் 2019): பாஜகவின் சவ்கிதார் ( Chowkidar) பிரச்சாரத்திற்கு எதிராக காங்கிரஸ் கடும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது.

வரும் நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி பாஜக Chowkidar வாட்ச்மேன் பிரச்சாரத்தை கையில் எடுத்துள்ளது. இந்த பிரச்சாரம் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. பாஜகவினர் அவர்களது பெயருக்கு முன்னாள் சவ்கிதரை இணைத்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் சவ்கிதார் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக செய்தி தொடர்பாளரும் மூத்த தலைவருமான ரன்தீப் சிங் சுரஜ்வாலா, " மோடி பாபாவும் நாற்பது திருடர்களும் என்று சவ்கிதாரை விமர்சித்துள்ளார்.

மேலும் மோடி வாட்ச்மேன் என்று சொல்வது எப்பேற்பட்ட அபத்தம், விஜய் மல்லையா முதல் நிரவ் மோடி உள்ளிட்ட திருடர்கள் வங்கிகளில் உள்ள பல ஆயிரம் கோடி ரூபாய்களை திருடிக் கொண்டு நாட்டை விட்டு வெளியேற உதவிய வாட்ச் மேன் மோடி, 10 லட்சத்திற்கு உடை அணியும் வாட்ச் மேன், பண மதிப்பிழப்பால் நாட்டை நிலைகுலையச் செய்த வாட்ச் மேன். சிறு தொழிலை முடக்கிய வாட்ச் மேன் என்று பிரதமர் என்று ரன்தீப் சிங் சுரஜ்வாலா தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...