லண்டனில் நீரவ் மோடி கைது!

மார்ச் 20, 2019 472

புதுடெல்லி (20 மார்ச் 2019): இந்திய வங்கிகளில் கையாடல் செய்துவிட்டு வெளிநாடு தப்பியோடிய நீரவ் மோடி லண்டனில் கைது செய்யப் பட்டுள்ளார்.

பஞ்சாப் நேஷனல் வங்கிகளில் சுமார் 13 ஆயிரம் கோடி ரூபாய் கடன்களை பெற்ற வைர வியாபாரி நீரவ் மோடி, அந்த கடன்களை வங்கிகள் திருப்பி கேட்ட போது அதை செலுத்தாமல் லண்டனுக்கு கடந்த ஆண்டு நீரவ் மோடி தப்பி ஓடிவிட்டார்.

இதையடுத்து தலைமறைவாகியுள்ள அவரை இந்தியா கொண்டு வரும் முயற்சிகளில் அமலாக்கத் துறையினர் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் நிரவ் மோடி லண்டனில் உள்ள டோட்டன்ஹாம் நீதிமன்ற சாலை பகுதியில் புதிய கெட்டப்பில் சுற்றி திரியும் வீடியோ வெளிவந்தது.

இந்த நிலையில் அவர் இன்று கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவர் லண்டன் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படுவார் என அறிவிக்கப்படுகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...