ஜாகிர் நாயக்கின் நிதி உதவியாளர் கைது!

மார்ச் 22, 2019 461

மும்பை (22 மார்ச் 2019): மத போதகர் ஜாகிர் நாயக்கின் நிதி உதவியாளர் அப்துல் காதிர் நஜ்முத்தீன் சதக் கைது செய்யப் பட்டுள்ளார்.

மத போதகர் ஜாகிர் நாயக் மற்றும் அவரது தொண்டு நிறுவனங்களை மத்திய அரசு கடந்த 2016 ஆம் ஆண்டு தடை செய்தது. மேலும அவரது சொத்துக்கள் முடக்கப் பட்டுள்ளன.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை அன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் ஜாகிர் நாயக்கின் நிதி உதவியாளர் அப்துல் காதிர் நஜ்முத்தீன் சதக்கை கைது செய்துள்ளனர். இவர் துபாயிலிருந்து ஜாகிர் நாயக்கிற்கு பல்வேறு வகைகளில் நிதியுதவி அளித்ததாக குற்றம் சாட்டப் பட்டு கைது செய்யப் பட்டுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...