நாடாளுமன்றத் தேர்தலில் ராகுல் காந்தி கேரளாவில் போட்டி!

மார்ச் 23, 2019 412

வயநாடு (23 மார்ச் 2019): காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரள மாநிலத்தில் போட்டியிடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வரும் நாடாளுமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் தலைவர்கள் எங்கெங்கு போட்டியிடுவார்கள்? என்ற கேள்வி எழுந்தது.

இந்நிலையில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாட்டில் போட்டியிடப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முன்னதாக அவரது பிரதான தொகுதியான அமேதியில் போட்டியிடப் போவதில்லை என்று அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...