பாஜக வேட்பாளர் பட்டியலில் முஸ்லிம் பெண் வேட்பாளர்!

மார்ச் 24, 2019 552

புதுடெல்லி (24 மார்ச் 2019): பாஜக வெளியிட்டுள்ள வேட்பாளர் பட்டியலில் முதன் முதலாக முஸ்லிம் பெண் வேட்பாளருக்கும் இடம் அளிக்கப் பட்டுள்ளது.

பாஜக நேற்று வெளியிட்டுள்ள நான்காவது வேட்பாளர் பட்டியலில் மேற்கு வங்கத்தின் ஜான்கிபூர் தொகுதியில் மஃபூஸா காதுன் என்ற முஸ்லிம் பெண் வேட்பாளரை நிறுத்தியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை அக்கட்சி வரலாற்றிலேயே நீண்ட காலத்திற்குப் பிறகு முதன்முதலாக பாஜக ஒரு முஸ்லிம் பெண் வேட்பாளரை களமிறக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...