பாஜகவில் புறக்கணிக்கப் பட்ட அத்வானி - மமதா பானர்ஜி கவலை!

மார்ச் 26, 2019 428

கொல்கத்தா (26 மார்ச் 2019): அத்வானியின் தற்போதைய நிலை குறித்து கவலைப் படுகிறேன் என்று மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

பாஜக மூத்த தலைவர் அத்வானிக்கு இம்முறை தேர்தலில் போட்டியிட பாஜக சீட் வழங்கவில்லை. அவருக்கு பதிலாக குஜராத் காந்தி நகரில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா போட்டியிடுகிறார்.

இந்நிலையில் அத்வானி பாஜகவிலிருந்து புறக்கணிக்கப் பட்டதற்கு மமதா கவலை தெரிவித்துள்ளார். பாஜக இளைஞர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அதேவேளை மூத்தவர்களையும் மதிக்கத் தெரிந்திருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

அத்வானியின் நிலை இன்றுள்ள தலைவர்களூக்கும் வரலாம் என்றும் மமதா பானர்ஜி தெரிவித்தார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...