ஓப்போ மொபைல் போன் வெடித்து இளைஞர் காயம் - வீடியோ

மார்ச் 27, 2019 491

ஐதராபாத் (27 மார்ச் 2019): சட்டைப் பையில் இருந்த மொபைல் போன் வெடித்ததில் இளைஞர் ஒருவர் காயம் அடைந்துள்ளார்.

தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த முஹம்மது இம்ரான் என்ற இளைஞர் இருசக்கர வாகனத்தில் பயணம் மேற்கொன்டு இருந்தார். மேலும் அவர் சட்டைப் பையில் மொபைல் போன் வைத்திருந்தார்.

இந்நிலையில் இரு சக்கர வாகனம் சாலையில் சென்று கொண்டிருந்த போது சட்டைப் பையில் இருந்த ஓப்போ மொபைல் போன் திடீரென வெடித்தது. இதனால் படுகாயம் அடைந்த இம்ரான் சாலையில் விழுந்தார்.

வீடியோ

இதனை அடுத்து அவரை அருகில் உள்ளவர்கள் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். தலை தொடை உள்ளிட்ட பகுதிகளில் காயம் அடைந்த இம்ரானுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது.

தொழில் நுட்ப கோளாறு காரணமாக மொபைல் போன் வெடித்திருக்கக் கூடும் என போலிசார் சந்தேகிக்கின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...