விஞ்ஞானிகளுக்கான பாராட்டை தனதாக்கும் மோடி - மமதா பானர்ஜி தாக்கு!

மார்ச் 27, 2019 281

கொல்கத்தா (27 மார்ச் 2019): விண்வெளியில் சாதித்தது விஞ்ஞானிகளே அன்றி மோடியல்ல என்று மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

இந்திய செயற்கைக்கோள்களை அழிக்கும் முயற்சியைத் தடுக்க ஏசாட் - ஆண்ட்டி சாட்டிலைட்டை ஏவி விண்வெளியில் சாதனை நிகழ்த்தியுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.

இது தொடர்பாக மம்தா பானர்ஜி தனது ட்விட்டரில், "இந்த அரசாங்கம் காலாவதியாகிவிட்டது. இந்த நிலையில் இப்படி ஒரு மிஷனை ஏற்றுநடத்த வேண்டிய அவசரமும் இல்லை அதை பிரதமர் அறிவிக்க வேண்டிய அவசியமும் இல்லை. இது மூழ்கிக் கொண்டிருக்கும் பாஜக எனும் கப்பலுக்கு ஆக்ஸிஜன் செலுத்தும் அவசரமாகவே தெரிகிறது.

தேர்தல் நேரத்தில் இதனை அறிவித்து மோடி ஆதாயம் தேட முயற்சிக்கிறார். இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் முறையிடவுள்ளோம்.

அதேவேளையில், இஸ்ரோ மற்றும் டிஆர்டோ விஞ்ஞானிகளை நினைத்து பெருமிதம் கொள்கிறேன். உண்மையான பாராட்டுக்குரியவர்கள் விஞ்ஞானிகளே. இத்தகைய ஆராய்ச்சிகள் ஆண்டு தோறும் நடைபெறும் நிகழ்வுதான். ஆனால், இப்போது இந்தத் தருணத்தில் மோடி அதனை அறிவித்து தனக்கும் தனது அரசுக்கும் பெருமை தேடிக் கொள்கிறார். என்று மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...