மோடியின் உரை குறித்து ராகுல் காந்தி கிண்டல்!

மார்ச் 27, 2019 275

புதுடெல்லி (27 மார்ச் 2019): மிஷன் சக்தி திட்டம் வெற்றிகரமானது குறித்து மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கிண்டலடித்துள்ளார்.

விண்வெளியில் இந்திய செயற்கைக்கோள்களை பாதுகாக்கும் வகையில், விண்வெளியில் எதிரிநாட்டு செயற்கைக்கோள்களை தாக்கி அழிக்கும் மிஷன் சக்தி திட்டத்தை இன்று பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு (டிஆர்டிஓ) வெற்றிகரமாக நடத்திக் காட்டியது.

இந்நிலையில் இன்று இதுகுறித்து உரையாற்றிய பிரதமர் மோடி, "அமெரிக்கா,சீனா போன்ற வளர்ந்த நாடுகளுக்கு அடுத்ததாக இந்தியாவிடம் செயற்கைக்கோள்களை சுட்டுவீழ்த்தும் திறன் இருக்கிறது. புவியின் குறைந்த நீள்வட்டப்பாதையில் இருக்கும் செயற்கைக்கோள்களை சுட்டுவீழ்த்த முடியும். இதை இந்தியா தற்காப்புக்காக மட்டும் பயன்படுத்தும். இது வரலாற்று சாதனை" என்று தெரிவித்தார்.

இதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள ராகுல் காந்தி, மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின், பாதுகாப்பு ஆய்வு மேம்பாட்டு அமைப்புக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

அதேவேளை மோடியின் உரையை கிண்டலடித்துள்ள ராகுல் காந்தி, டிஆர்டிஓ அமைப்பின் பணிக்கு வாழ்த்துக்கள், உங்களை நினைத்து பெருமைப்படுகிறேன். பிரதமர் மோடிக்கு உலக நாடக தினவாழ்த்துக்கள்" எனத் தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...