ராகுல் காந்தியின் மனிதாபிமானம் - குவியும் பாராட்டுக்கள்!

மார்ச் 28, 2019 575

புதுடெல்லி (28 மார்ச் 2019): டெல்லியில் தனது காரில் சென்று கொண்டிருந்த போது,சாலையோரத்தில் அடிபட்டு நின்று கொண்டிருந்த பத்திரிக்கையாளருக்கு ராகுல் காந்தி உதவி செய்த சம்பவம் அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.

நேற்று மாலை ராகுல் காந்தி மத்திய டெல்லி, ஹுமாயூன் சாலையில் தனது காரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த சாலையில் பத்திரிகையாளர் ஒருவர் அடிப்பட்ட நிலையில் நின்றுகொண்டிருந்தார். அதனை கவனித்த ராகுல் காந்தி உடனே தனது வாகனத்தை நிறுத்தி,அந்த பத்திரிகையாளரை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்காக தனது காரில் ஏற்றி கொண்டார். அப்போது அவரது தலையில் காயம் இருந்ததால் ரத்தம் வழிந்து கொண்டே இருந்தது. ராகுல் காந்தி தனது கைக்குட்டையால் அடிபட்டவரின் ரத்தத்தைத் துடைத்தார்.

பின்பு காயமடைந்த பத்திரிகையாளரை எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்த்துவிட்டு ராகுல் காந்தி புறப்பட்டு சென்றார்.ராகுல் காந்தி மிகவும் மனிதாபிமானம் உள்ளவர் என்பதற்கு இதுவே சான்று என நெட்டிசன்கள் புகழ்ந்து வருகிறார்கள்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...