ஏழு வயது சிறுவன் மீது கொடூர தாக்குதல் - சிறுவன் மூளைச்சாவு அடைந்ததாக தகவல்!

மார்ச் 30, 2019 443

தொடுபுழா (30 மார்ச் 2019): கேரளாவில் 7 வயது சிறுவன் மீது இளைஞர் ஒருவர் நடத்திய கொடூர தாக்குதலில் சிறுவன் மூளைச் சாவு அடைந்துள்ளார்.

கேரள மாநிலம் தொடுபுழாவில் வசித்து வந்த பெண் ஒருவரின் ஏழு வயது மகனை அவரது உறவினரான அருண் ஆனந்த் என்பவர் சிறுவனை கண்டிப்பதாகக் கூறி கொடூரமாக தாக்கியுள்ளார். இதனால் படுகாயம் அடைந்த சிறுவன் கோலஞ்சேரி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

இந்நிலையில் சிறுவன் தற்போது மூளைச் சாவு அடைந்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே சிறுவனை தாக்கிய அருண் ஆனந்த் போலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...