கேரளாவில் போட்டியிடுவது ஏன்? - ராகுலின் அதிரடி விளக்கம்!

ஏப்ரல் 02, 2019 399

புதுடெல்லி (02 ஏப் 2019): காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாட்டில் போட்டியிடுவது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

இன்று டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு ராகுல் காந்தி கூறியதாவது:-

காங்கிரஸ் கட்சியை கண்டு பிரதமர் மோடி அஞ்சுகிறார். நாட்டின் பாதுகாப்பு மற்றும் ஊழல் தொடர்பாக எங்களுடன் நேரடியாக விவாதம் செய்வதை அவர் தவிர்த்து வருகிறார். இந்த தேர்தலில் வெற்றி, தோல்வியை நிர்ணயம் செய்யக்கூடிய காரணியாக ஊழல், வேலை வாய்ப்பின்மை, விவசாயிகளின் துயரம் ஆகியவை முக்கிய பங்கு வகிக்கும்.

மோடியின் ஆட்சியால் தனிமைப்படுத்தப்பட்டதாக தென்னிந்தியா உணர்கின்றது. ‘உங்களுடன் நான் இருக்கிறேன்’ என்ற நம்பிக்கையை விதைப்பதற்காகவே இந்த முறை நான் வயநாடு பாராளுமன்ற தொகுதியிலும் போட்டியிடுகிறேன்.

இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...