தற்கொலை செய்து கொள்வோம் - இந்துத்வா கும்பலால் தாக்கப் பட்ட முஸ்லிம் குடும்பம்!

ஏப்ரல் 03, 2019 558

குர்கான் (03 ஏப் 2019): குர்கானில் இந்துத்வா கும்பலால் தாக்கப் பட்ட குடும்பத்தினர் இந்த வழக்கை விரைவில் முடித்து குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

குர்கானில் ஹோலி பண்டிகையின்போது கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த முஸ்லிம் இளைஞர்கள் இந்துத்வா கும்பலால் தாக்கப் பட்டனர். மேலும் சில இந்துத்வா கும்பல் முஹம்மது அக்தார் என்பவர் வீட்டுக்கு வந்து வன்முறையில் ஈடுபட்டது. இதனை தொடந்து கிரிக்கெட் விளையாடிய முஸ்லிம் இளைஞர் வீட்டுக்கு வந்த இந்துத்வா கும்பல் 40 பேர் அந்த இளைஞர் குடும்பத்தினரை கொடூரமாக தாக்கினர் அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதுகுறித்து தாக்கப் பட்ட குடும்பத்தை சேர்ந்த முஹம்மது அக்தார் போலீசில் புகார் அளித்தார். ஆனால் இதுவரை யாரும் கைது செய்யப் படவில்லை.

இதனிடையே இச்சம்பவம் தொடர்பாக இதுவரை போலீஸ் நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் வழக்கை திரும்பப் பெற வேண்டி மிரட்டுகிறது. இந்த வழக்கை போலீஸ் சரிவர விசாரிக்க வில்லையேல் தற்கொலை செய்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்று முஹம்மது அக்தார் தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...