காவலாளி மோடி தயவால் முதலாளிகளின் கொள்ளைகள்- ராகுல் காந்தி சாடல்!

ஏப்ரல் 03, 2019 334

திஸ்பூர்: காவலாளி மோடி தயவால் முதலாளிகள் நாட்டில் கொள்ளையடித்து சென்றனர். என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

அசாம் மாநிலத்தில் காங்கிரஸ் சார்பில் பாராளுமன்ற தேர்தலுக்கான பொதுக்கூட்டம் இன் று நடைபெற்றது. லக்கிம்பூர் பகுதியில் நடந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்று பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது வங்கிகள் வாசலில் மெகுல் சோஸ்கி, நிரவ் மோடி, அனில் அம்பானி உள்ளிட்டோர் நிற்கவில்லை.

நீங்கள் உங்கள் பணத்துக்காக வரிசையில் நின்றபோது, காவலாளி மோடியின் உதவியால் அவர்கள் பணத்தை கொள்ளையடித்து வெளிநாடுகளுக்கு தப்பிச்சென்று விட்டனர்.

சாதாரணமாக பொதுமக்கள் மற்றும் விவசாயிகள், தொழிலாளர்கள் வீடுகளின் வாசலில் காவலாளி நிற்பதை நீங்கள் பார்த்துள்ளீர்களா? அனில் அம்பானி, கவுதம் அதானி உள்ளிட்டோர் வீடுகளில் காவலாளிகள் நிற்பதை பார்த்துள்ளோம் என தெரிவித்துள்ளார்

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...