இந்திய ராணுவப் படை ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்திய இந்திய விமானப் படை!

ஏப்ரல் 03, 2019 496

புதுடெல்லி (03 ஏப் 2019) : இந்திய ராணுவப் படைக்கு சொந்தமான ஹெலிகாப்டரை இந்திய விமானப் படை சுட்டு வீழ்த்திய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் மத்திய ரிசர்வ் காவல் படையைச் சேர்ந்த 44 வீரர்கள் பலியானதற்கு பதிலடியாக பிப்ரவரி 27 ஆம் தேதி பாகிஸ்தானுக்குள் நுழைந்த இந்திய விமானப்படை தாக்குதலை நடத்தியது. இதில் இந்திய விமானப்படை தவறுதலாக தமது சொந்த இராணுவ ஹெலிகாப்டரையே ஏவுகணையால் சுட்டு வீழ்த்தியிருப்பது தற்போது தெரிய வந்துள்ளது. இதில் ஆறு விமானப்படை வீரர்கள் உள்ளிட்ட எழுவர் பலியாகியுள்ளனர்.

ஒரு மாதத்திற்கு முன்னதாக 25 பாகிஸ்தானிய போர்விமானங்கள் இந்திய வான் எல்லையை கடக்க முயற்சி செய்ததாகவும் அப்பொழுது தற்காப்பிற்காக ஏவப்பட்ட ஏவுகணை இலக்குத் தவறியிருக்கலாம் என்றும் இந்திய அதிகாரிகள் கூறினர். Mi-17 V5 ஹெலிகாப்டர் ஒன்று தன்னுடைய சுற்றோட்டத்தை முடித்து திருப்பும் நேரத்தில் இந்த ஏவுகணை தாக்குதல் நடந்திருப்பதாக முன்னணி ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது..

இதற்கிடையே தொழில் நுட்ப கோளாறு காரணமாகத்தான் ஹெலிகாப்டர் விபத்துக்கு உள்ளாகியதாக ஒரு தகவல் உள்ளது. எனினும் மனிதத் தவறுகள் இதில் இருக்குமானால் சம்மந்தப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்படுவார்கள் என்று விமானப்படை உயரதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...