வேட்புமனு தாக்கல் செய்ய ராகுல் காந்தி கேரளா வருகை!

ஏப்ரல் 03, 2019 304

கோழிக்கோடு (03 ஏப் 2019): கேரள மாநிலம் வயநாட்டில் போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று நள்ளிரவு கேரளா வந்தார்.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அமேதி தொகுதி தவிர கேரள மாநிலம் வயநாட்டிலும் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். இந்நிலையில் ராகுல் காந்தி நாளை வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்கிறார். இதற்காக இன்று நள்ளிரவு ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கோழிக்கோடு விமான நிலையம் வந்தடைந்தனர்.

இருவரையும் காங்கிரஸ் தலைவர்கள் வரவேற்றனர். ராகுல் காந்தியை வரவேற்க கோழிக்கோடு விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கான காங். தொண்டர்கள் குழுமி இருந்தனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...