ஜீரோவை ஹீரோவாக்கும் முயற்சி - மோடி வாழ்க்கை வரலாறு திரைப் படம் பற்றி காங்கிரஸ் கருத்து!

ஏப்ரல் 04, 2019 340

புதுடெல்லி (04 ஏப் 2019): ஜீரோவான மோடியை ஹீரோவாக்க காட்டும் முயற்சிதான் மோடி குறித்த திரைப்படம் என்று காங்கிரஸ் கருத்து தெரிவித்துள்ளது.

பிரதமர் நரேந்திரமோடி வாழ்க்கையை மையமாக வைத்து ‘பி.எம்.நரேந்திரமோடி’ என்ற பெயரில் புதிய படம் தயாராகி உள்ளது. இதில் மோடியின் கதாபாத்திரத்தில் நடிகர் விவேக் ஓபராய் நடித்துள்ளார்.

தேர்தல் நேரத்தில் இந்த படம் வருவதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப் பட்டது. எனினும் நீதிமன்றம் இந்த திரைப்படத்திற்கு தடை விதிக்க மறுத்துவிட்டது

இது குறித்து நேற்று படத்தில் மோடியாக நடித்த விவேக் ஓபராய் கூறுகையில், ‘இந்த படத்தை ஏன் இந்த அளவு சிலர் எதிர்க்கின்றனர்? என புரியவில்லை. மூத்த மற்றும் பிரபல வக்கீல்களான அபிஷேக் சிங்வி, கபில் சிபல் ஆகியோர் இது போன்ற சாதாரண படத்திற்கு தடை கோரி மனு அளித்ததும் ஏன்? என தெரியவில்லை. இவர்கள் மோடியின் படத்திற்கு பயப்படுகிறார்களா?அல்லது காவலாளியின் தடியை கண்டு பயப்படுகிறார்களா?’ என கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா கூறியதாவது:

இந்த படம் மார்க்கெட் இழந்த நடிகர், தோல்வியடைந்த தயாரிப்பாளர், மற்றும் தான் ஜீரோ என நிரூபித்த ஒருவரின் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டதாகும். இந்த படம் கருப்புப்பணத்தினை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளதா என நிச்சயம் விசாரிக்க வேண்டும். மேலும் பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை தேர்தல் ஆணையம் கவனத்தில் கொள்ள வேண்டும் என ஏற்கனவே கூறியுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...