தேர்தல் நேரத்தில் மோடிக்கு துபாய் விருது - சுப்பிரமணியன் சாமி மகள் கருத்து!

ஏப்ரல் 06, 2019 818

புதுடெல்லி (06 ஏப் 2019): தேர்தல் நேரத்தில் பிரதமர் மோடிக்கு விருது அறிவித்திருப்பது அவசியமற்றது என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி மகள் சுஹாசினி ஹைதர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்துடன் வைத்துள்ள் நட்புரவை பாராட்டி துபாய் சேக் கலீஃபா இந்திய பிரதமர் மோடிக்கு ஜியாத் விருது அறிவித்து கவுரவித்தார். இந்நிலையில் இந்த விருது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சாமியின் மகள் சுஹாசினி ஹைதர், "தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இந்த விருது துபாய் அரசு அறிவித்திருப்பது அவசியமற்றது" என்று தெரிவித்துள்ளார்.

சுஹாசினி, முன்னாள் இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் சல்மான் ஹைதரின் மகன் திரு.நதீம் ஹைதரின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...