மோடியின் கூட்டத்திலிருந்து திடீரென எழுந்து சென்ற கூட்டம் - தடுத்து நிறுத்திய போலீஸ்!

ஏப்ரல் 09, 2019 509

இம்பால் (09 ஏப் 2019): மணிப்பூரில் பிரதமர் மோடி கலந்து கொண்ட கூட்டத்திலிருந்து பொதுமக்கள் வெளியே செல்ல முயன்ற விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மணிப்பூரின் இம்பால் நகரில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்ட கூட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் திடீரென வெளியேறினர். ஆனால் அவர்களை போலீசார் வெளியில் செல்ல அனுமதிக்கவில்லை. மேலும் கூட்டம் நடைபெற்ற வளாகத்தின் கதவை பூட்டி பொதுமக்களை வெளியே செல்ல விடாமல் தடுத்தனர்.

இத வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஆனால் இது இப்போது எடுக்கப் பட்ட வீடியோவல்ல என்றும் அது பழைய வீடியோ என்றும் கூறப்படுகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...