யாருக்கு ஆதரவு ?- டெல்லி ஜும்மா மசூதி தலைமை இமாம் பதில்!

ஏப்ரல் 09, 2019 858

புதுடெல்லி (09 ஏப் 2019): வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு அளிக்கப் போவதில்லை என்று டெல்லி ஜும்மா மசூதி தலைமை இமாம் செய்யது அஹமது புகாரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், "ஒவொரு தேர்தலிலும் அரசியல் கட்சிகள் முஸ்லிம்களின் கோரிக்கைகளை நிறை வேற்றுவதாக தெரிவிக்கின்றன. ஆனால் தேர்தல் முடிந்தவுடன் எதுவும் நிறைவேற்றப் படவில்லை. எனவே இந்த முறை எந்த கட்சிக்கும் தனிப்பட்ட ஆதரவு அளிக்கப் போவதில்லை."என்று டெல்லி ஜும்மா மசூதி தலைமை இமாம் தெரிவித்துள்ளார்.

அதேவேளை இந்த தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல் என்பதால் முஸ்லிம்கள் அதனை உணர்ந்து வாக்களிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...