நக்சல் தாக்குதலில் பாஜக எம்.எல்.ஏ பலி!

ஏப்ரல் 09, 2019 253

ராய்ப்பூர் (09 ஏப் 2019): சத்தீஸ்கர் நக்சலைட் தாக்குதலில் பாஜக எம்.எல்.ஏ உட்பட ஐந்து பேர் பலியாகியுள்ளனர்.

நாடாளுமன்றத் தேர்தலின் முதற்கட்ட வாக்குப் பதிவு நாளை மறுநாள் நடைபெற உள்ள நிலையில், சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடா பகுதியில் நக்சலைட் நடத்திய தாக்குதலில் பா.ஜ.க எம்.எல்.ஏ பீமா மாண்டவி மற்றும் நான்கு வீரர்கள் பலியாகி உள்ளனர்.

இதுக்குறித்து பேசிய நக்சல் எதிர்ப்பு அமைப்பின் டி.ஐ.ஜி. பி. சுந்தர் ராஜ், தண்டேவாடா பகுதியில் நக்சலைட் நடத்திய சக்திவாய்ந்த IED குண்டு வெடிப்பு தாக்குதலில் பா.ஜ. எம்.எல்.ஏ பீமா உட்பட 5 பேர் வீரமரணம் அடைந்துள்ளனர். இந்த தாக்குதல் தேர்தல் பிரச்சாரம் முடித்து விட்டு சென்றுகொண்டிருந்தபோது நடத்தப்பட்டது. இதுக்குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது எனக் கூறினார்.

இந்த தாக்குதலை அடுத்து மாநிலத்தின் முதலமைச்சர் பூபக் பாகேல் ராய்பூருக்கு திரும்பி உள்ளார். அங்கு உயர் மட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...