பாஜக தொப்பியை அணிய மறுத்த மாணவி கல்லூரியை விட்டு நீக்கம்!

ஏப்ரல் 10, 2019 524

மீரட் (10 ஏப் 2019): உத்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஒரு கல்லூரியில் பாஜக தொப்பியை அணிய மறுத்த முஸ்லிம் மாணவி கல்லூரியை விட்டு நீக்கம் செய்யப் பட்டுள்ளார்.

உத்திர பிரதேசம் திவான் சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பு பயிலும் உம்மன் கனம் என்ற முஸ்லிம் மாணவி சக மாணவிகளுடன் ஆக்ரா சுற்றுலா சென்றார். அங்கு சக கல்லூரி மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் உம்மன் கனம் தலையில் பாஜக தொப்பியை அணிய வலியுறுத்தியுள்ளனர். ஆனால் அவர் அதற்கு மறுத்துவிட்டார்.

இதற்கிடையே கல்லூரி நிர்வாகம் அவரை சஸ்பெண்ட் செய்துள்ளது. மேலும் அவர் மீது, சரியாக படிப்பதில்லை, சொல்லும் ப்ராஜக்ட்களை செய்வதில்லை என்ற போலியான குற்றச்சாட்டை வைத்து கல்லூரியை விட்டு சஸ்பெண்ட் செய்துள்ளது.

இதனை அடுத்து உம்மன் கனம் கல்லுரிக்கு எதிராக போலீசில் புகார் அளித்துள்ளார். ஆனால் விஸ்வ இந்து பரிஷத் உள்ளிட்ட அமைப்புகள் மாணவி உம்மன் கனத்திற்கு மிரட்டல் விடுத்துள்ளதோடு, போலீசில் அளித்த புகாரை வாபஸ் பெற கட்டாயப் படுத்தியுள்ளது.

ஆனால் மாணவி அதற்கு மறுத்துவிட்டார். மேலும் கல்லூரி மொத்தமும் இந்துத்வாவின் கையில் உள்ளது. எனவே அங்கு செல்லவோ அங்கு பயிலவோ எனக்கு அச்சமாக உள்ளது. வீணில் நான் சரியாக படிப்பதில்லை என்று என் மீது பழி போடுகின்றனர். பாஜக தொப்பியை அணிய மறுத்ததால் என் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுத்துள்ளனர்."என்று உம்மன் கனம் கல்லூரி மீது குற்றம் சாட்டியுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...