தேர்தல் முடியும்வரை மோடி வாழ்க்கை வரலாறு குறித்த படத்துக்கு தடை!

ஏப்ரல் 10, 2019 214

புதுடெல்லி (10 ஏப் 2019): நாடாளுமன்றத் தேர்தல் முடியும் வரை பிரதமர் மோடியின் பயோபிக் திரைப்படம் வெளியிடுவதற்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு இந்தியில் திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது. இதில் விவேக் ஓபராய் ஹீரோவாக நடித்துள்ளார். சந்தீப் சிங் என்பவர் தயாரிக்க, படத்தை ஓமங் குமார் என்பவர் இயக்கி இருக்கிறார்.

தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து, மோடியின் பயோபிக் படம் தொடர்பான சர்ச்சைகள் வெடித்து வந்தன. மோடியின் பயோபிக் திரையிடப்பட்டால், அது வாக்காளர்களை திசை திருப்பும் வகையில் அமையும் என்று கூறி, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன.

இதன்பின்னர் பயோபிக் திரைப்படத்தை தேர்தல் முடியும் வரை வெளியிட அனுமதிக்க கூடாது என்று காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தது. இந்த நிலையில், தேர்தல் முடியும் வரையில் மோடியின் பயோபிக் திரைப்படத்தை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்து அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.

நாளை இந்த திரைப்படம் வெளியாக இருந்த நிலையில், தேர்தல் ஆணையத்தின் முடிவு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...