ரஃபேல் ஒப்பந்த ஊழல் - மத்திய அரசின் மனு உச்ச நீதிமன்றத்தால் நிராகரிப்பு!

ஏப்ரல் 10, 2019 284

புதுடெல்லி (10 ஏப் 2019): ரஃபேல் ஊழல் தொடர்பான மத்திய அரசின் மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

ரஃபேல் விவகாரத்தில் எந்த ஒரு ஊழலும் நடைபெறவில்லை என முன்பு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. ஆனால் தற்போது ரஃபேல் வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட மறு சீராய்வு மனுவை பத்திரிகைகளில் வெளியான ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு விசாரணைக்கு ஏற்கக்கூடாது என்று மத்திய அரசு எழுப்பிய முதல் கட்ட ஆட்சேபனையை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது.

இந்நிலையில் ரஃபேல் விவகாரத்தில் ஊழல் உள்ளதை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...