முதல் கட்ட வாக்குப் பதிவு இன்று தொடங்கியது!

ஏப்ரல் 11, 2019 258

புதுடெல்லி (11 ஏப் 2019): மக்களவைக்கான முதல் கட்ட வாக்குப் பதிவி இன்று தொடங்கியது.

நாடாளுமன்றத்துக்கு முதல் கட்டமாக 20 மாநிலங்களில் 91 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், சிக்கிம், ஒடிசா ஆகிய 4 மாநில சட்டசபைகளுக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

வாக்குப்பதிவு துவங்கியுள்ள நிலையில், வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி டுவிட்டரில் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில், ‘மக்களவைத் தேர்தல் இன்று தொடங்கி உள்ளது. முதல் கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் உள்ள மக்கள் சாதனை படைக்கும் அளவில் பெரிய எண்ணிக்கையில் வந்து வாக்கினை பதிவு செய்ய வேண்டும். குறிப்பாக முதல் முறை வாக்களிக்க உள்ள இளைஞர்கள், அதிக அளவில் வந்து வாக்களிக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...