ஆந்திரா வாக்குப் பதிவில் இரு கட்சியினரிடையே மோதல் - இருவர் பலி

ஏப்ரல் 11, 2019 363

பண்டரப்பள்ளி (11 ஏப் 2019): ஆந்திராவில் வாக்குப் பதிவின்போது இரு கட்சியினரிடையே ஏற்பட்ட மோதலில் இருவர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் மக்களவை தேர்தல் 2019 முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று (ஏப்ரல் 11) காலை ஏழு மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 20 மாநிலங்களில் 91 மக்களவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. நான்கு மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தலும் நடைபெறுகிறது.

இந்நிலையில் பண்டார்பள்ளியில் உள்ள புத்துலபட்டு தொகுதியில் தெலுங்குதேசம் மற்றும் ஒய்.எஸ்.ஆர். கட்சித் தொண்டர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. பின்னர் காவல் துறையினர் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். அதேபோல அனந்தபூர் மாவட்டம் தாடிபத்திரி தொகுதிக்குட்பட்ட வீராபுரத்திலும் இரு கட்சியினரும் கடுமையாக மோதிக் கொண்டனர்.

இந்த மோதல் சம்பவத்தால் இரண்டு பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...