இளைஞருக்கு பளார் விட்ட நடிகை குஷ்பு!

ஏப்ரல் 12, 2019 325

பெங்களூரு (12 ஏப் 2019): நடிகை குஷ்பு தன்னிடம் தவறாக நடக்க முயன்றவரின் கன்னத்தில் அறைந்த வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கர்நாடக மாநிலம் மத்திய பெங்களூரு தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளர் ரிஸ்வான் அர்ஷாத்தை ஆதரித்து நடிகையும், காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளருமான குஷ்பு, வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இதுதொடர்பாக வெளியாகியுள்ள அந்த வீடியோவில், கூட்ட நெரிசலில் சிக்கியபடி குஷ்பு மெதுவாக நடந்து செல்கிறார். அப்போது திடீரென தனது பின்னால் வந்த இளைஞரின் கன்னத்தில் பளார் என அறைகிறார். உடனடியாக பின்னால் பாதுகாப்புக்கு வந்த போலீசார் அந்த இளைஞரை அங்கிருந்து இழுத்துச் செல்கின்றனர்.

இந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக சமூகவலைதளங்களில், நடிகை குஷ்புவை பாராட்டி பலரும் பதிவிட்டு வருகின்றனர். ஆனால் இந்த சம்பவம் குறித்து குஷ்பு சுந்தர் இதுவரை எந்த கருத்தும் கூறவில்லை.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...