முஸ்லிம்களை மிரட்டும் தொனியில் பேச்சு - மேனகா காந்திக்கு நோட்டீஸ்!

ஏப்ரல் 13, 2019 405

லக்னோ (13 ஏப் 2019): முஸ்லிம்கள் குறித்து சர்ச்சை கருத்து வெளியிட்ட மத்திய அமைச்சர் மேனகா காந்திக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

உத்திர பிரதேசம் மாநிலம் சுல்தான்பூரில் பாஜக வேட்பாளராக போட்டியிடும் மேனகா காந்தி, தேர்தல் பிரச்சாரத்தின்போது, "முஸ்லிம்கள் எனக்கு வாக்களிக்காவிட்டால் அவர்களுக்காக எந்த வேலையும் செய்யமாட்டேன்" என்று பேசினார்.

இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வைரலானது. மேலும் இதுபோன்று தேர்தல் பிரச்சாரத்தில் மிரட்டும் தொனியில் பேசுவது தேர்தல் விதிமுறை மீறல் என்பதாக காங்கிரஸ் குற்றம் சாடடியது. இதனை அடுத்து தேர்தல் ஆணைய உத்தரவின்படி லக்னோ நீதிமன்றம் மேனகா காந்திக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...