மோடியை எதிர்த்து வாரணாசியில் போட்டியிடும் பிரியங்கா காந்தி?

ஏப்ரல் 13, 2019 773

புதுடெல்லி (13 ஏப் 2019): பிரதமர் மோடியை எதிர்த்து வாணராசியில் பிரியங்கா காந்தி போட்டியிடப் போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரியங்கா மோடிக்கு எதிராக வாரணாசி தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்தாகவும், எனினும் இறுதி அறிவிப்பு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வசம் இருந்தே வெளியாகும் எனவும் நம்பிக்கைகுறிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

முன்னதாக காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி சமீபத்தில் கட்சி விருப்பப்பட்டால் தான் மக்களவை தேர்தலில் போட்டியிட தயாராக இருப்பதாக அறிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது மக்களவை தேர்தலில் வாரணாசி தொகுதியில் அவர் போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...