அனில் அம்பானிக்கு வரிச் சலுகை - பாஜகவுக்கு பின்னடைவு!

ஏப்ரல் 13, 2019 266

புதுடெல்லி (13 ஏப் 2019): ரிலையன்ஸ் நிறுவன அதிபர் அனில் அம்பானிக்கு பிரெஞ்ச் அரசு ரூ.1,100 கோடி வரியை தள்ளுபடி செய்துள்ளதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வரிச்சலுகை குறித்து டெல்லியில் உள்ள பிரான்ஸ் தலைமை தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது: அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் பிலாக் நிறுவனத்துக்கும் பிரான்ஸ் நாட்டு வரிவிதிப்பு அதிகாரிகளுக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தையில் எட்டப்பட்ட சமரச திட்டத்தின் மூலம் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், பிரான்ஸ் அரசின் சட்டத்திட்டங்கள் மற்றும் கட்டுப்பாடுகளுக்கு இணங்க இந்த சமரசம் ஏற்பட்டதாகவும், இந்த விவகாரத்தில் எந்த விதமான அரசியல் தலையீடுகளும் இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்தல் நேரத்தில் வெளிவந்துள்ள இந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...