நடிகை ஜெயப்பிரதாவின் உள்ளாடை நிறம் குறித்து பேசிய அசாம்கானுக்கு பாஜக கண்டனம்!

ஏப்ரல் 15, 2019 401

லக்னோ (15 ஏப் 2019): நடிகை ஜெயப்பிரதாவின் உள்ளாடை காக்கி நிறம் என்று வர்ணித்த சமாஜ்வாதி கட்சி தலைவர்களில் ஒருவரான அசாம் கானுக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் ராம்புர் தொகுதியில் அஸாம் கானுக்கு எதிராக பாஜக சார்பில் நடிகை ஜெயப்பிரதாவை போட்டியாக நிறுத்தியுள்ளது. சமாஜ்வாதிக் கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் முன்னிலையில் பொதுக்கூட்டத்தில் பேசிய அஸாம் கான், ஜெயப்பிரதா காக்கி நிற உள்ளாடை அணிந்துள்ளதாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பாஜக இதைவிட தரக்குறைவான அரசியல் வேறு இல்லை என்று குறிப்பிட்டுள்ளது. ஆனால், காக்கி என்று அவர் குறிப்பிட்டது RSS தொண்டர்கள் அணியும் அரைக்கால் சட்டை என சமாஜ்வாதி தெரிவித்துள்ளது.

இது குறித்து அஸாம் கான் கூறுகையில், ஜெயாவின் பெயரை தான் குறிப்பிடவில்லை என்றும் குற்றவாளி என நிரூபணமானால் தான் தேர்தலில் போட்டியிட தயாராக இல்லை என்றும் தெரிவித்துள்ளர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...