பாஜகவுக்காக வாக்களிக்க வெளிநாட்டு வேலையை இழந்த இளைஞர்!

ஏப்ரல் 15, 2019 590

பெங்களூர் (15 ஏப் 2019): பெங்களூரை சேர்ந்த இளைஞர் ஒருவர் ஆஸ்திரேலியாவிலிருந்து, பாஜகவுக்காக வாக்களிக்க வேலையை ராஜினாமா செய்துவிட்டு  இந்தியா வந்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் உயர் பதவி வகித்த ஒரு இளைஞர் பாஜகவின் மீது பற்று கொண்டு வாக்களிக்க இந்தியா செல்ல அவர் பணிபுரிந்த நிறுவனத்திடம் விடுப்பு கேட்டுள்ளார். ஆனால் விடுப்பு கிடைக்கவில்லை.

இதனால் தான் வகித்த உயர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவுக்கு வாக்களிப்பதற்காக பெங்களூர் வந்துள்ளார்.

இதற்கிடையே அந்த இளைஞரை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா? என்றும் அந்த இளைஞருக்கு நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...