பாஜக எம்.எல்.ஏவுக்கு உதவிய பாகிஸ்தான்!

ஏப்ரல் 15, 2019 358

புதுடெல்லி (15 ஏப் 2019): தேர்தல் பிரச்சாரத்திற்காக இந்திய ராணுவத்தை பாராட்டி பாஜக எம்.எல்.ஏ பாடி வெளியிட்ட பாடல் பாகிஸ்தான் பாடல் மெட்டை காப்பியடித்தது தற்போது வெளியாகியுள்ளது.

தெங்கானாவில் உள்ள கோசமஹால் தொகுதி எம்.எல்.ஏ தாக்கூர் ராஜா சிங் லோத் என்பவர் தான் ராம நவமி அன்று நமது இந்திய ராணுவத்திற்கு ஒரு பாடல் வெளியிடப்போவதாக தெரிவித்தார்.

இந்நிலையில் நேற்று தனது டிவிட்டர் பக்கத்தில் தான் வெளியிடுவதாகக் கூறியிருந்த பாடலை அவர் வெளியிட்டார்.

பாடல் புதிதாக இருக்கும் என்று அனைவரும் கேட்ட யாவருக்கும் ஒரே அதிர்ச்சி காரணம் இதே பாடலை கடந்த பாகிஸ்தான் நாட்டு ராணுவம் வெளியிட்டிருந்தது. இப்பாடலை சாஹிர் அலி பாஜ்ஹா என்பவர் எழுதியுள்ளதாகவும் தெரிகிறது.

இது இப்படியிருக்க இந்தப் பாடலைக் கேட்ட பாகிஸ்தான் நாட்டு ராணுவமந்திரி இதுபற்றி கருத்து தெரிவித்ததுடன் ‘ இது காப்பியடிக்கபட்டது ’என்று கூறியுள்ளார்.

அதேபோல பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷாஹித் அஃப்ரிடியும் பாகிஸ்தான் பாடலை இந்திய எம்.எல்.ஏ காப்பியடித்ததாக தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...