தேர்தலை ஒட்டி ஃபேஸ்புக், ட்விட்டரில் பல பதிவுகள் நீக்கம்!

ஏப்ரல் 16, 2019 313

புதுடெல்லி (16 ஏப் 2019): தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்ததை தொடர்ந்து ஃபேஸ்புக், ட்விட்டர் மற்றும் இதர சமூக வலைதளங்களில் இருந்து சுமார் 500-க்கும் அதிக போஸ்ட்கள் நீக்கப்பட்டுள்ளன.

தேர்தல் விதிகளை மீறியதாக ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் இருந்து சுமார் 503 பதிவுகள் தேர்தல் ஆணைய பரிந்துரையின் பேரில் நீக்கப்பட்டுள்ளன. இவற்றில் சுமார் 500 பதிவுகள் ஃபேஸ்புக்கில் இருந்து மட்டும் நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைய இயக்குனர் ஜெனரல் திரேந்திர ஓஜா தெரிவித்தார்.

இரண்டு பதிவுகள் ட்விட்டரில் இருந்தும், ஒன்று வாட்ஸ்அப் செயலியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளன. இதுதவிர ஃபேஸ்புக்கில் எட்டு குற்றச்சாட்டுகளும், ட்விட்டரில் 39 குற்றச்சாட்டுகள் நிலுவையில் இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கடந்த மாதம் தேர்தல் ஆணையத்தின் கோரிக்கையை ஏற்று தேர்தல் சமயத்தில் விதிகளை மீறும் பதிவுகளை 48 மணி நேரத்திற்குள் நீக்க சமூக வலைதளங்கள் ஒப்புக் கொண்டிருந்தன. இதற்கென தேர்தல் ஆணையம் மற்றும் சமூக வலைதள நிறுவன அதிகாரிகளிடையே சந்திப்பு நடைபெற்றது.

தேரதலையொட்டி சமூக வலைதளங்களின் மீது இதுபோன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறையைகும்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...